குழந்தைகள் இதய அறுவை சிகிச்சைக்கு அரசு நிதி உதவி திட்டம்: கருணாநிதி தொடங்கி வைத்தார்!

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (18:53 IST)
17 த‌னியா‌ரமரு‌த்துவமனைக‌‌ளி‌லகுழ‌ந்தைக‌‌‌‌ளஇதஅறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கஅரசு ‌நி‌தி உத‌வி வழ‌ங்கு‌மபு‌திய ‌தி‌ட்ட‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றதொட‌ங்‌கி வை‌த்தா‌ர்.

இதகு‌றி‌த்ததமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களின் வாழ்க்கையில் தற்போதைய மாறிவரும் சூழ்நிலைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் போன்றவை காரணமாக இதய நோயினால் பாதிக்கப்படுவோர் குறிப்பாக, இளம் சிறார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதய நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காகக் குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள விவரம் முதலமைச்சர் கருணாநிதி கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் அரிய உயிர்களைக் காக்கும் பொருட்டுத் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக, ஆண்டு வருவாய் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகயுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி மூடிய இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு 10 ஆயிரம் ரூபாயும், சாதாரண திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு 30 ஆயிரம் ரூபாயும், கடினமான திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ.70 ஆயிரமும் நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று கையொழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவம், ஊரக நலப் பணிகள் துறை இயக்குனரும், 17 தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளும் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் 20 குழந்தைகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள 10 தனியார் மருத்துவ மனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் அனுமதிகளை வழங்கி இத்திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்திட தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள 17 தனியார் மருத்துவமனைகள் வருமாறு: போரூ‌ரராமச்சந்திரா மருத்துவமனை, செ‌ன்னஅப்பல்லோ மருத்துவமனை, செ‌ன்னபிராண்ட்டியர் லைப் லைன் மருத்துவமனை, செ‌ன்னஆர்.வே ஹெல்த்கேர் லிமிடெட், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், செ‌ன்னகே.ஜெ.மருத்துவமனை, செ‌ன்னசூரியா மருத்துவமனை, செ‌ன்னமன‌ப்பா‌க்க‌த்‌தி‌லஉ‌ள்மியாட் மருத்துவமனை, செ‌ன்னலைப்- லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கா‌‌ஞ்‌சிபுர‌மமாவ‌ட்ட‌மகேள‌ம்பா‌க்க‌மமரு‌த்துவமனை‌யி‌லஉ‌ள்செட்டிநாடு மருத்துவமனை, மதுரை‌யி‌லஉ‌ள்வடமலையான் மருத்துவமனை, மதுரஅப்பல்லோ ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை, கோவமீனாட்சி மிஷன் மருத்துவ மனை, ஆராய்ச்சி நிலையம், கோவபி.எஸ்.ஜி. மருத்துவமனை, கோவஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவகே.ஜி. மருத்துவமனை, கோவஜி.குப்புசாமிநாயுடு நினைவு மருத்துவமனை.

வெப்துனியாவைப் படிக்கவும்