அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக வி.எம். சேவியர் கிரிஸ்ஸோ நாயகத்தை தமிழக அரசு நியமித்துள்ளது.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக குறைக்க பூமிக்கு அடியில் ரயில் போக்குவரத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம் வடிவமைக்கப்படுகிறது. இதைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் தொடங்கப்படுவதன் அடையாளமாக அதன் தலைமைப் பதவியான சிறப்பு அலுவலராக தற்போது முனீர் கோடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இத்திட்டம் முழுமை பெறும்போது அவர் அதன் தலைவராவார்.
இதே போன்று அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக வி.எம்.சேவியர் கிரிஸ்ஸோ நாயகம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு உள்ளார்.