தமிழ்நா‌ட்டுட‌ன் ஜெர்மனி நெருக்கம்-ஜெர்மனி பிரதிநிதி

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (15:25 IST)
தமிழ்நாடு மற்றும் ஜெர்மனி நாட்டின் நெருக்கம் வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அந்நாட்டின் அரசு பிரதநிதி ரோலண்ட் பிரடெரிச் ஹெர்மன் கூறினார்.

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியும் சென்னை ஐ.ஐ.டி., மற்றும் ஜெர்மனியில் பயின்று வந்த பேராசிரியர்கள் குழு ஆகிய மூவரும் இணைந்து நனோ டெக்னாலஜியும், சமூகத்தின் அதன் பங்களிப்பும் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாட்டின் ஜெர்மனி அரசின் பிர‌திநிதி ரோலண்ட் பிரடெரிச் ஹெர்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பண்ணாரி அம்மன் கல்லõரியில் நடக்கும் இந்த விழாவில் நான் கலந்துகொள்வது எதிர்பாரத நிகழ்ச்சியாகும். இங்கு பார்த்தபின்தான் தெரிகிறது ஜெர்மனிக்கு இணையாக இங்கு கல்வியில் சிறந்து விளங்குகிறது என்றார். மேலும் அவர் எதிர்காலத்தில் ஜெர்மனியில் இருந்து தொழில்நுட்ப கூட்டுறவு தமிழகத்தில் அதிகரிக்கும் என்றார். இதன் இருநாடுகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும் என அவர் கூறினார்.

விழாவில் தேசிய அளவிலான நூலக பத்திரிக்கையை பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட ஜெர்மனி அரசு பிர‌திநிதி ரோலண்ட் பிரடெரிச் ஹெர்மன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ஐ.ஐ.டி. சேர்மேன் டாக்டர் மோகன் விழா முக்கிய‌த்துவம் குறித்து பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்