பி‌ற்ப‌ட்டோரு‌க்கு 27 ‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீடு கோ‌ரி டெல்லியில் நாளை ராமதா‌ஸ் ஆர்ப்பாட்டம்!

Webdunia

புதன், 21 நவம்பர் 2007 (09:43 IST)
பிற்பட்டோருக்கு 27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு வழங்க கோ‌ரி டெல்லியில் நாளை ா.ம.க. நிறுவனத் தலைவர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இது கு‌றி‌த்து புதுச்சேரி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், பிற்படுத்தப்பட்டோருக்கு அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்பில் 27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி நாளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அனைவரும் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதே போல தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களையும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு அளித்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.

மண்டல் ஆணைய‌ம் அமைக்கப்படுவதற்கு முன்பு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு ப‌‌னிர‌ண்டரை ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றதாகவும், மண்டல் ஆணைய‌ம் சிபாரிசுக்கு பின்னர் 5.3 ‌விழு‌க்காடாக இந்த இட ஒதுக்கீடு குறைந்து உள்ளதாக மத்திய அரசு வழ‌க்க‌றிஞ‌ர் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தின் நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்