வைகோ, நெடுமாற‌ன் ‌பிணை‌யி‌ல் ‌விடுதலை!

Webdunia

சனி, 17 நவம்பர் 2007 (17:37 IST)
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உ‌ள்‌ளி‌ட்ட கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனை ‌பிணை‌யி‌ல் விடுதலை செய்ய நீ‌தி‌ம‌ன்ற‌ம் உத்தரவிட்டது.

இலங்கை ராணுவத்தால் குண்டு வீசி கொல்ல‌ப்ப‌ட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்செல்வனு‌‌‌‌க்கு வீர வணக்கம் செலுத்துவத‌ற்காக காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் தடையை மீறி செ‌ன்னை‌யி‌ல் ஊர்வலமாக செல்ல முயன்ற ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் உ‌ள்‌‌ளி‌ட்ட 262 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய ‌சிறை‌யி‌ல் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ‌பிணை ‌விடுதலை சென்னை எழும்பூர் 13-வது ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்தனர். ‌நீ‌‌‌திப‌தி முருகானந்தம் (பொறுப்பு) முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி முருகானந்தம், வைகோ, பழ.நெடுமாறன் உள்பட 262 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அனைவரும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ஒரு நபர் ‌பிணை‌யி‌ல் விடுதலை ஆகலாம் என்று ‌நீ‌‌‌திப‌தி உத்தரவில் குறிப்பிட்டார். விசாரணை காவ‌ல் அதிகாரி அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். 262 பேருக்கும் தலா ஒருநபர் ‌பிணை என்றால் 262 பேர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு வரவேண்டும்.

எனவே, குறைந்தபட்சம் 100 பேர் ‌பிணை போட வந்தால் போதும் என்று ‌நீ‌‌திப‌தி நிபந்தனையை சற்று தளர்த்தினார். ‌பிணை தொகையை கட்டி 100 பேரை ‌பிணை போட ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு வரவழைத்த பிறகு வைகோ உள்பட அனைவரும் ஜெயிலிலிருந்து விடுதலை ஆவார்கள் என்று தெ‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்