''மாநிலங்களில் ஓடும் நதிகளை இணைப்பதற்கு மாநில அரசுகளின் ஆதரவு கிடைக்கவில்லை'' என்று மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
நதிகளை இணைப்பது தொடர்பாக தென் மாநிலங்களின் பாசனத்துறை அமைச்சர்களுக்கு தாம் பல கடிதங்கள் எழுதி உள்ளேன். ஆனால் இதுவரை எந்த பதிலும் அவர்களிடமிருந்து வரவில்லை.
நதிகளை இணைக்கவும் அவற்றை தேசிய மயமாக்கவும் மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். விரியுடன் குண்டாறு நதியை இணைப்பதற்கான ஆய்வின் முதல் கட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
காவிரி தண்ணீர் கட்டளைக் கால்வாய் மூலம் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக குண்டாறுடன் இணைக்கப்படும். பின்னர் அது வைகை ஆற்றுடன் இணைக்கப்படும். நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் தேவை பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.