ஜெயலலிதா வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு: காவ‌ல் ஆணைய‌ரிட‌ம் அ.தி.மு.க. மனு!

Webdunia

செவ்வாய், 13 நவம்பர் 2007 (16:02 IST)
அ.தி.மு.க. பொது செயலாள‌ர் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டில் அடிக்கடி மர்ம நபர்கள் நுழைவது வாடிக்கையாகி வருவதா‌ல் அவரது ‌வீ‌ட்டி‌ற்கு கூடுத‌‌ல் பாதுகா‌ப்பு போட வே‌ண்டு‌ம் எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல் ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌ல் குமர‌னிட‌ம் அ.‌தி.மு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மனு கொடு‌த்தன‌ர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, கலைராஜன் ஆகியோர் செ‌ன்னை மாநகர காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சில் குமரனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொது செயலாளருமான ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டில் அடிக்கடி மர்ம நபர்கள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த மாதம் ஒரு மர்ம நபர் வீட்டின் நூலகம் வரை வந்து பிடிபட்டான். பல்வேறு தீவிரவாத இயக்கங்கள்களை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ஒடுக்கியதால் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதுபோல் நேற்றும் ஒரு மர்ம மனிதன் உள்ளே நுழைய முயன்றுள்ளான்.

நல்ல வேளையாக பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவனை மடக்கி பிடித்துள்ளனர். இதுபோன்று தொடர்ந்து மர்ம மனிதர் நடமாட்டம் இருந்து வருவதால் அவரது வீட்டைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவருக்கு கூடுதல் பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று மனு‌வில் அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ள‌ன‌ர்.

மனுவை பெற்று கொண்ட காவ‌ல் ஆணைய‌ர் நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்