சிறுபான்மை கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காலிகமாக பணிபுரியும் கல்லூரி பேராசிரியர்களை அவர்களது திறமை, பணி மூப்பின் அடிப்படையில் பணி உறுதி செய்வதும், பணி உயர்வு வழங்குவதும் வாடிக்கையானது.
ஆனால் கிறிஸ்தவ சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் நிலைமை வேறுவிதமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் தங்களது கல்லூரியில் பணி புரியும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பேராசிரியர்களைக் கூட புறக்கணித்துவிட்டு தங்களுக்கு பிடித்த வயதிலும், அனுபவத்திலும் குறைந்தவர்களை நியமனம் செய்கிறார்கள்.
சில இடங்களில் தன்னிடம் பயின்ற மாணவன் பணி நிரந்தரம் பெற்று பேராசிரியராக நியமிக்கப்பட்டுகிறார்கள். ஆனால் பல பேராசிரியர்கள் ஆண்டு கணக்கில் தற்காலிகமாக பணியாற்றும் நிலையும் உள்ளது. எனவே சிறுபான்மை கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் 10 ஆண்டு நிறைவு செய்தவர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு அரசு வற்புறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று இல. கணேசன் கூறியுள்ளார்.