நாளை செ‌ன்னை‌க்கு 1000 ‌சிற‌ப்பு‌ப் பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ம்!

Webdunia

சனி, 10 நவம்பர் 2007 (12:48 IST)
தீபாவ‌ளியை‌க் கொ‌ண்டாட சொ‌ந்த ஊ‌ர்களு‌க்கு‌ச் செ‌ன்றவ‌ர்க‌ள் ‌சிரம‌ம் இ‌ல்லாம‌ல் ‌திரு‌ம்பு‌ம் வகை‌யி‌ல் நாளை த‌மிழக‌த்‌தி‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து செ‌ன்னை‌க்கு கூடுதலாக 1000 ‌சிற‌ப்பு‌ப் பேரு‌ந்துகளை அரசு‌ப் போ‌க்குவர‌த்து‌க் கழக‌ம் இய‌க்கு‌கிறது.

'' செ‌ன்னை‌யி‌லிரு‌ந்து இய‌க்க‌ப்படு‌ம் அரசு விரைவு‌ப் பேரு‌ந்துக‌ள் அனைத்தும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்ய நிரம்பி விட்டன. அதனால் வழக்கமாக ஓடும் 850 பேரு‌ந்துக‌ள் தவிர கூடுதலாக 100 சிறப்பு பேரு‌ந்துகளை இய‌க்க உ‌ள்ளோ‌ம்'' எ‌ன்று ‌விரைவு‌ப் போ‌க்குவர‌த்து‌க் கழக‌த்தி‌ன் நிர்வாக இயக்குனர் ராம சுப்பிரமணியம் தெரிவித்தார்.

'' விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை, வேலூர், காஞ்‌சிபுரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வழக்கமாக 2700 பேரு‌ந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 450 சிறப்பு பேரு‌ந்துக‌ள் இயக்கப்பட உ‌ள்ளன எ‌ன்று'' ‌விழுப்புர‌ம் கோ‌ட்ட நிர்வாக இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்தார்.

இவைத‌விர மதுரை, கும்பகோணம், சேலம், திருச்சி, கோவை கோட்டங்களில் இருந்து 450 சிறப்பு பேரு‌ந்துக‌ள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன எ‌ன்று அ‌ந்த‌ந்த‌க் கோ‌ட்ட‌ங்க‌ளி‌ன் அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்துள்ளன‌ர்.

பொது மக்கள் வசதிக்காக சில போக்குவரத்து கழகங்களில் `நான் ஸ்டாப்' பேரு‌ந்து வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எஸ். என்று சொல்லக்கூடிய `செலக்டிவ் ஸ்டாப் சர்வீஸ்' பேரு‌ந்துகளும் சில வழித்தடங்களில் புதிதாக விடப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்