தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் ரூ. 5 கோடியே 60 லட்சத்துக்கு மதுவகைகளை விற்பனையாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் சாதாரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகும். பண்டிகை காலங்களில் மது விற்பனை சராரசரியை காட்டிலும் அதிகளவாகும்.நடப்பாண்டு தீபாவளி பண்டிகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ. 5 கோடியே 60 லட்சத்துக்கு மது விற்பனையாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு வாரமாகவே அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடந்தாண்டை காட்டிலும் இந்த தீபாவளியில் கூடுதலாக ரூ. ஒரு கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.