சேலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பாலியானார்கள்.
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் ஒருவரது வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து காரில் வந்த மூன்று பேர் மீது சேலத்தில் இருந்து தீவட்டிப்பட்டி நோக்கி சென்ற லாரி, தளவாய்பட்டி அருகே மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தினேஷ்குமார் மற்றும் அவரது மனைவி நித்யாவை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். வழியிலேயே இருவரும் இறந்தனர்.
தீவட்டிப்பட்டி காவல்துறையினர் விசாரித்து லாரி ஓட்டுநர் சாமந்திராஜராஜனை கைது செய்தனர். மூவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின், நெத்திமேட்டில் உள்ள செங்கோடகவுண்டரின் உறவினர் வீட்டில் ஒப்படைக்கப்பட்டது. சேலத்திலேயே மூவரின் இறுதி சடங்கும் நடத்தப்பட்டது.