அறிவியலின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை செய்தவர்களுக்கான தமிழக அறிவியலறிஞர் விருது குறித்து தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவித்துள்ளது.
வேளாண் அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல், பொறியியல் தொழில்நுட்பம், கணிதவியல், மருத்துவம், இயற்பியல், கால்நடை அறிவியல், சமூகவியல் ஆகிய பத்து துறைகளில் திறமை வாய்ந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
இந்த விருது பெற விரும்புவோர் உரிய விவரங்கள், சான்றுகளையும் தொகுத்து, நான்கு பிரதிகளை தாங்கள் சார்ந்த கல்வி நிறுவனத்தின் தலைவர், முதல்வர், இயக்குனர், துணைவேந்தர் ஆகியோரின் முன்மொழிவுடன் அனுப்ப வேண்டும்.
இது குறித்த விவரங்களை www.tnscst.org இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 30. உறுப்பினர் செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் அலுவலக வளாகம், சென்னை- 600 025 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் ச.வின்சென்ட் கேட்டுக் கொண்டுள்ளார்.