சென்னையில் மெட்ரோ ரெயில்: அமைச்சரவை ஒப்புதல்!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (16:27 IST)
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இ‌ன்று நடைபெற்றது. இதில் சென்னமெட்ரரெயிலதிட்டத்துக்ககொள்கஅளவிலஒப்புதலஅளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து புதிய அரியலூர் மாவட்டம் அமைப்பது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பொது மக்களின் விருப்பத்தின் பேரிலும், நிர்வாகக் காரணங்களின் அடிப்படையிலும், புதிய அரியலூர் மாவட்டம் அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அரியலூர், உடையார்பாளையம், செந்துறை வட்டங்களை உள்ளடக்கியதாகவும், பெரம்பலூர் மாவட்டம் தற்போதைய தலைமையிடத்துடன் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை வட்டங்களைக் கொண்டதாகவும் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் அளிக்கப்படுவதுடன், டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் தயாரித்து வழங்கியுள்ள விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் இரண்டு வழித் தடங்களைக் கொண்டுள்ள இத்திட்டத்தின் முதலாவது வழித்தடம் வண்ணாரப்பேட்டை முதல் எழும்பூர், தேனாம்பேட்டை வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலும், 2-வது வழித் தடம் கோட்டை முதல் அண்ணாநகர், வடபழனி, அசோக் நகர், ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரையிலும் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இவ்விரு வழித் தடங்களில் மொத்தமுள்ள 46.5 கி.மீ. நீளத்தில் ஏறத்தாழ 20 கி.மீ. நீள தூரம் தரைப் பகுதிக்குக் கீழும், எஞ்சிய தூரம் தரைப்பகுதிக்கு மேலெழும்பியும் அமையும். ரூ.9,757 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்காக மத்திய அரசின் நிதியுதவி, கடனுதவி கோரி மத்திய அரசை அணுகுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்திற்கு ஜப்பான் நாட்டின் சர்வதேச வங்கி நிதியுதவி வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாநில, மத்திய அரசின் நிதி முதலீட்டுடன் தொடங்கப்படும் `சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்' எனும் பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள், தொழிற் பூங்காக்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், நிலக் கொள்கையினை உருவாக்குவதற்காக தலைமைச் செயலாளரின் தலைமையில் தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றினை அமைப்பது என்றும் இக்குழு இது தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வரைவுக் கொள்கை ஒன்றை அளித்திட வேண்டும் என்றும், அந்த வரைவுக் கொள்கையை முதலமைச்சர் நியமிக்கும் அமைச்சரவையின் துணைக் குழு விவாதித்து அளிக்கும் பரிந்துரைகளுடன் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

படாளத்திலுள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாண்டிய ராஜபுரம் மதுரா சர்க்கரை ஆலை ஆகியவற்றை மீண்டும் செயல் படுத்துவதற்கு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் குத்தகைதாரரைத் தேர்வு செய்வதென்றும், மின் உற்பத்தி, எத்தனால் உற்பத்தி மையங்களை நிறுவுவதற்கு அனுமதியளிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய விரிவாக்கம், நவீனமயமாக்கும் திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 1069.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியை இந்திய விமான நிலைய ஆணையக் குழுமத்திற்கு வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்