அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அருகே நேற்று இரவு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரை ஜெயலலிதா வீட்டுக்கு பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் பிடித்து விசாரித்தனர்.
பின்னர் அந்த வாலிபரை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் உதவிக் ஆணையர் கண்ண பிரான் விசாரணை நடத்தினார். அப்போது அவரது பெயர் கண்ணன் (வயது 25) என்பதும், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
அந்த வாலிபரிடம் நடத்திய தீவிர விசாரணையில், பிளஸ் 2 வகுப்பு வரை படித்துள்ளேன். ஜெயலலிதா சந்தித்து வேலை கேட்க வந்தேன் கூறினார்.