பார்வர்டுபிளாக் கண்டன ஆர்ப்பாட்டம்: கார்த்தி‌க்!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (19:26 IST)
மு‌‌த்துராம‌லி‌ங்க‌த் தே‌வ‌ர் ‌சிலையை கள‌ங்க‌ப்படு‌த்‌திய சமூக ‌விரோ‌திகளை உடனே கைது செ‌ய்ய வே‌ண்டு‌ம். இ‌ல்லையெ‌னி‌ல் ‌நியாய‌ம் ‌கிடை‌க்கு‌ம் வரை க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று தமிழக பார்வர்டு பிளாக் தலைவர் நடிகர் கார்த்திக் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய தலைவரும், தெய்வீக திருமகன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நூற்றாண்டு ஜெயந்தி விழாவையொட்டி நான் மதுரையிலும், கோவில்பட்டியிலும் ராஜபாளையத்திலும், நெல்லையிலும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஆனால் போதிய பாதுகாப்பு இல்லாததினாலும், பல்வேறு காரணங்களாலும் சொந்தங்களை சந்திக்க இயலாமல் போனது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அதற்கு காரணமாக இருந்த விஷக்கிருமிகளை கண்டறிந்து நம் இயக்கத்தில் இருந்து விலக்கி வருகிறேன்.

சங்கரன்கோவில் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் பசும்பொன்முத்துராமலிங்க தேவர் உருவச்சிலையை சமூக விரோதிகள் சிலர் களங் கப்படுத்தி விட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடன் எனது ரத்தம் கொதிக்கிறது. இந்த கீழ்த்தரமான செயலைப் புரிந்து தமிழகத்தில் அமைதியையும், ஒற்றுமையையும் சீர் குலைக்க செய்ய முயலும் சமூக விரோதிகளை அரசும், காவல் துறையினரும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து உடனே கைது செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் நியாயம் கிடைக்கும்வரை கண்டன ஆர்‌ப்பாட்டங்களை நடத்த நேரிடும்.

சட்டம்- ஒழுங்கிற்கு எந்த வித பங்கமும் வரக்கூடாது என்று நான் எப்பொழுதும் கூறி வருகிறேன். எங்கள் இயக்கத்தை சேர்ந்தவ‌ர்களும் அதனை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அரசு உடனே நடவடிக்கை எடுத்து அதே இடத்தில் மாற்று வெண்கலச்சிலை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் எ‌ன்று பா‌ர்வ‌ர்டு ‌பிளா‌க் தலைவ‌ர் கா‌‌ர்‌த்‌தி‌க் கூ‌றியு‌ள்ள‌ா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்