வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலு இழந்தது!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (16:41 IST)
வங்க கடலில் கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்தது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு இழந்தது.

அதன் பிறகு வங்கக் கடலில் இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நேற்று முன்தினம் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடாவில் தமிழ்நாடு - ஆந்திரா கடற்கரை பகுதியில் நிலை கொண்டு இருந்தது. இதனால் தமிழக‌ம் முழுவதும் மழை பெய்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று வலு இழந்தது என்றாலும் வங்க கடலின் மேற்பரப்பு பகுதியில் ஏற்பட்ட அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, தமிழக‌ம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்