திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கனிமொழி, ஈழத்தில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழிக்கத் துடிக்கும் சிறிலங்கா அரசைப் பற்றியும் தமிழ் மக்களின் துயரங்களைப் பற்றியும் ஆண்டன் பாலசிங்கம் மறைவுக்குப் பிறகு உலகுக்குத் தெரிவித்த போராளி தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றார்.
சிங்கள அரசின் தாக்குதலில் கொல்லப்பட்ட போராளிகளின் மறைவுக்குத் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக இரங்கலும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இவரை தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன உறவு? இவரை தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார் கனிமொழி.