தமிழக மீனவர்கள் 99 பேர் விடுதலை!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (10:58 IST)
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 99 பேர் ‌விடுதலை செய்யப்பட்டனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடந்த 31ஆ‌மதேதி கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 99 பேரகட‌த்‌தி‌சசெ‌ன்றன‌ர். மேலு‌ம் 17 படகுகளையு‌மகொ‌ண்டசெ‌ன்றன‌ர்.

இந்த தகவ‌லஅறிந்த முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி அகமதுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய 17 படகுகளையும், கைது செய்யப்பட்ட 100 மீனவர்களையும் மீட்டு தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும், அதற்காக இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து மத்திய இணை மந்திரி அகமது இலங்கை அரசுடன் உடனடியாக பேசி, கைது செய்யப்பட்ட 100 மீனவர்களையும், 17 படகுகளையும் மீட்டுத்தருவதாக உறுதியளித்தார். இந்தநிலையில் 99 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், `நாகப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை சென்னையில் உள்ள இலங்கை தூதரக தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையால் இது சாத்தியமானது' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இலங்கை காங்கேசன்துறையில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் அரசு உத்தரவைத்தொடர்ந்து அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கோடியக்கரை கடல்பகுதியில் இந்திய கடலோர காவல்படையிடம் நேற்று மாலை 5 மணியளவில் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்களின் படகுகளும், வலைகளும் அவர்களிடமே வழங்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 99 பேரும் நள்ளிரவு 12.30 மணி அளவில் கோடியக்கரை வந்தடைந்தனர். பின்னர் இன்று அதிகாலை 5 மணி‌க்கு மீனவர்கள் அனைவரும் நாகை துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களை மாவட்ட அ‌திகா‌ரிக‌ள் வரவே‌ற்றன‌ர். விடுவிக்கப்பட்ட மீனவர்களை கண்டதும் அவர்களது உறவினர்கள் ஓடிச்சென்று கட்டித்தழுவி வரவேற்றனர். பின்னர் அனைவரும் அவர்களது வீட்டுக்கு சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்