சிவாஜிகணேசன் மனைவி கமலா அம்மாள் உடல் தகனம் சென்னையில் இன்று காலை நடந்தது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் சென்னையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருடைய உடல், சென்னை தியாகராயநகரில் உள்ள சிவாஜிகணேசனின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
கமலா அம்மாளின் இறுதி சடங்குகள் இன்று காலை மணிக்கு தொடங்கியது. கமலா அம்மாளின் உடல் சிவாஜி வீட்டில் இருந்து பெசன்ட்நகர் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.