‌நீ‌திம‌‌ன்ற உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து ‌தீ‌ர்மான‌ம் கொ‌ண்டு வ‌ந்தவ‌ர் ஜெயல‌லிதா : கருணா‌நி‌தி கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (18:01 IST)
''நீ‌திம‌ன்உ‌த்தரவஎ‌தி‌ர்‌த்தபேரவை‌யி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றிஜெயல‌லிதாதா‌ன், தற்போது தன்மீது உரிமைப் பிரச்சினை என்றதும் அத்தனை விதிமுறைகளையும் மீறி நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்திருக்கிறார்'' எ‌ன்றமுத‌ல்வ‌‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாகருணா‌நி‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்கே‌ள்‌‌வி ப‌தி‌லஅ‌றி‌க்கை‌‌யி‌ன் ‌விவர‌மவருமாறு:

கேள்வி : சட்டமன்ற நடவடிக்கை, நாடாளுமன்ற நடவடிக்கைக‌ளி‌லநீதிமன்றங்கள் தலையிடலாமா என்பதும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கலாமா என்பதும் பல ஆண்டு காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்து வருகிறது.

தனமீது சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட உரிமைப் பிரச்சனை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட உரிமைக் குழுவிற்கு விளக்கம் தராமல், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது கூட சட்டமன்ற உரிமையை மீறுகின்ற செயல் என்றே கூறப்படுகிறதே?

பதில் : இந்தக் கேள்வி முக்கியமாக அனைவரும் சிந்திக்கத்தக்க ஒன்றாகும். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இதை நீதிமன்றத்திலே கொண்டு சென்று அங்கே இடைக்காலத் தடையும் பெற்றுள்ள நிலையில், நீதிமன்றம் அனுப்புகின்ற தா‌க்‌கீதை பேரவைத் தலைவர் பெற்றுக் கொள்வாரா என்பது அவருக்குள்ள அதிகாரத்தைப் பொறுத்து அவர் முடிவெடுக்க வேண்டிய ஒன்றாக அமைகிறது.

இதற்கிடையில் எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது எதற்காக உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்பட்டது. அது தற்போது என்ன நிலையிலே உள்ளது, இதற்கு முன்பு இவ்வாறு உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்பட்டதுண்டா, அப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, நீதிமன்றத்திற்கு அப்போது கொண்டு செல்லப்பட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளித்தாலே, நாட்டு மக்களுக்கும் மற்றவர்களுக்கும் உண்மை புரியுமென்று நம்புகிறேன்.

17-10-2007 அன்று ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு அளித்த நே‌ர்காண‌ல் அவர்களுடைய அதிகாரபூர்வ ஏடான "நமது எம்.ஜி.ஆர்.'' இதழில் வெளிவந்தது வருமாறு:-

"சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி அவரது மகன், அவரது வாரிசு ஸ்டாலினுக்கு அறிவுரை கூறியதாக எனக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது கருணாநிதி சொன்னாராம். தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரும்போது நான் இருப்பேனோ இல்லையோ, ஆகவே நீ (ஸ்டாலின்) எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். இப்போது மற்ற கட்சிகளோடு இருக்கின்ற கூட்டணியை அப்படியே பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதில் கவனக்குறைவாக இருந்தால் நாளை ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் நீ பெரும் துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்க வேண்டிவரும் என்று சொன்னராம். அதற்கு ஸ்டாலினுடைய பதில் என்ன தெரியுமா? அடுத்த தேர்தல் வரும்போது அவர் உயிரோடு இருந்தால்தானே என்று சொன்னாராம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறி, அவர்களது ஏட்டிலும், வேறு ஏடுகளிலும் இந்தச் செய்தி வந்த பிறகு 18-10-2007 அன்று ஜெயலலிதாவின் இந்தப் பதிலால் பாதிக்கப்பட்டதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா மீது ஒரு உரிமை பிரச்சனை கொண்டு வந்தார். அந்த உரிமைப் பிரச்சனையைக் கூட பேரவைத் தலைவரின் அனுமதியின்றி கொண்டு வந்ததாக ஜெயலலிதா தரப்பினர் தற்போது கூறியிருக்கிறார்கள்.

பேரவைத் தலைவரின் அனுமதியின்றி உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்படவில்லை. 18-ஆம் தேதியன்று முறைப்படி மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவரிடம் உரிமைப் பிரச்சனையைக் கொண்டு வருவதற்கான அனுமதியை கேட்டு கடிதம் கொடுத்து, அந்தக் கடித நகலில் பேரவைத் தலைவர், பேரவை செயலாளர் ஆகியோரின் கையெழுத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் 18-ஆம் தேதிய அவை நடவடிக்கை குறிப்பின் முதல் பாராவைப் பார்த்தாலே, "மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்கள் ஒரு உரிமைப் பிரச்சனை குறித்து அறிவிப்பு ஒன்றினைக் கொடுத்துள்ளார். இப்பிரச்சனை குறித்து சுருக்கமாகச் சொல்லும்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று பேரவைத் தலைவர் கூறியிருப்பதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே பேரவைத் தலைவரின் அனுமதியின்றி உரிமைப் பிரச்சினை கொண்டு வரப்படவில்லை.

மு.க. ஸ்டாலின் அன்று பேரவையில் இந்தத் தகவலைக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை அவர் நிரூபிக்க முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். யாரும் நிரூபிக்க முன் வரவில்லை. மாறாக ஜெயலலிதா வெளியிலே செய்தியாளர்களிடம் பேசியதற்கு சட்டப் பேரவையில் எப்படி உரிமைப் பிரச்சினை கொண்டு வரலாம் என்று ஒரு கேள்வியை எழுப்பினார்க‌ள்.

அதற்கும் விளக்கம் அளிக்கும் வகையில் 19.10.2007 அன்று மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் படித்த அறிக்கையில், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அவையிலே உறுப்பினராகவே இல்லாத முரசொலி செல்வம் அவைக்கு வெளியிலே ஒரு ஏட்டிலே ஏதோ எழுதினார் என்பதற்காக உரிமைப் பிரச்சனை எழுப்பப்பட்டு, வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பேரவையில் கூண்டிலே ஏற்றி தண்டிக்கப்பட்ட நிகழ்ச்சியையும், அதே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நான் அவைக்கு வெளியிலே அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முரசொலியிலே தெ‌ரி‌வி‌த்கரு‌த்துகளு‌க்கஉ‌ரிமை‌ப் ‌பிர‌ச்சனை கொண்டு வரப்பட்டு, உரிமைக் குழுவிற்கு எந்தெந்த தேதிகளில் அனுப்பப்பட்டன என்ற விவரங்களையும் ஸ்டாலின் தொகுத்துக் கூறினார். அதற்கும் ஜெயலலிதாவிடமிருந்தோ, எதிர்த் தரப்பினரிடமிருந்தோ எந்த விதமான மறுப்பும் பதிலும் கிடையாது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இவ்வாறு என் மீது உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டு, அதற்கு விளக்கம் கோரி உரிமைக் குழுவிடமிருந்து எனக்கு கடிதம் வந்தபோது, முறைப்படி நான் அதற்கு விபரமாக பதிலை எழுதி உரிமைக் குழுவிற்கு அனுப்பினேனே தவிர, சட்டமன்றம் சம்மந்தப்பட்ட அந்த பிரச்சனையை அப்போது நான் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவில்லை.

ஆனால் தற்போது சட்டமன்ற உரிமைக் குழுவிடமிருந்து 20.10.2007 அன்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கு உரிமைப் பிரச்சனை மீதான விளக்கத்தைத் தருமாறு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு ஜெயலலிதா பதில் அளிக்காமல், நேரடியாக நீதிமன்றம் சென்றுள்ளார்.

இந்த வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுகுணா இடைக்காலத் தடை விதித்ததோடு, விளக்கம் கேட்டு தா‌க்‌கீதஅனுப்பவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

கேள்வி : நீதிமன்றம் தா‌க்‌கீதஅனுப்பினால் சட்டமன்றப் பேரவைத் தலைவர் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?

பதில் : இதற்கும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முன் மாதிரி உண்டு. 4.5.1992 அன்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது பேரவையில் அவை முனைவர் நாவலர் நெடுஞ்செழியனால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானமவருமாறு:-

"இந்திய அரசமைப்புசசட்டம் 194 ஆவது பிரிவின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, மற்றப் பேரவைகளைப் போலவே தனித்தன்மை வாய்ந்த பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் உரிமைகள் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறது. பேரவையின் உரிமைகளையும், உறுப்பினர்களின் உரிமைகளையும் எல்லா வகையிலும் காக்க வேண்டிய முழுப்பொறுப்பும் கடமையும் இந்தப் பேரவைக்கு இருக்கிறது. இவற்றைப் பொறுத்தவரை பேரவையின் உரிமைகளும், நடவடிக்கைகளும் நீதிமன்றங்கள், மற்றைய அமைப்புகள், தனிமனிதர் ஆகியோரின் தலையீட்டுக்கு அப்பாற்பட்டவையாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகிய மூன்றும் தனித்தனி பொறுப்புகளோடு, தனித்தனியே இயங்கும் தன்மை உடையனவாகும். நாடாளுமன்ற சட்டமன்றத்துறையும், நீதித்துறையும் ஒன்றை ஒன்று மதித்து நடக்க வேண்டியவை ஆகும். ஒன்றை ஒன்று தழுவி நின்று ஆதரித்து பணியாற்ற வேண்டியவை. ஒன்றின் அதிகார வரம்பில் மற்றொன்று தலையிடுவதற்கு வழியில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டம் 212-வது பிரி‌வி‌ன்படி, பேரவை தனது அதிகார வரம்புக்குட்பட்டு எடுக்கும் எந்த நடவடிக்கைகளையும் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற காரணத்திற்காக நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என்று தெளிவுபடுத்துகின்றது.

27.4.1992 (அ.தி.மு.க.ஆட்சியில்) அன்று, உச்சநீதிமன்றம், பேரவைச் செயலாளரைப் பிரதிவாதியாகச் சேர்த்து தா‌க்‌‌கீது அனுப்பியதாக உள்ள பிரச்சனை செய்தித்தாள்களில் வந்தபோது பேரவைத் தலைவர், இப்பேரவை இடும் கட்டளை மற்றும் தெரிவிக்கும் அறிவுரை ஆகியவை தவிர, வேறு எதையும் பேரவைச் செயலாளர் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று தீர்ப்பளித்துள்ளார் என்று இந்தப் பேரவை நினைவு கூர்கிறது.

பேரவை உரிமை மீறல் பிரச்சனைக்காக உச்சநீதிமன்றத்தில் உள்ள இப்பேரவை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் பேரவையின் எந்த உறுப்பினரோ, பேரவைச் செயலாளரோ, ஏனைய பேரவைச் செயலக அதிகாரிகளோ எவ்வித தா‌க்‌கீதுகளையும், அழைப்பு ஆணைகளையும் பிற ஆணைகளையும் அறிவுறுத்தல்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று இப்பேரவை தீர்மானிக்கிறது.''

இவ்வாறு அவரது ஆட்சியின்போது தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாதான், தற்போது தன்மீது உரிமைப் பிரச்சினை என்றதும், இங்கே தெரிவித்த அத்தனை விதிமுறைகளையும் மீறி இவரே நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்திருக்கிறார் எ‌ன்றகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்