புதுக்கோட்டையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பழகன், அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகளே ஆன நிலையில் சிலர் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வரட்டும் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பையும் அவர்கள் சமூகத்தை முன்னேற்றும் பொறுப்பையும் கருணாநிதி தொடர்ந்து செய்வார் என்றார்.
கருணாநிதி தவிர வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை ஜெயலலிதா தூசி போல ஊதித் தள்ளிவிடுவார். ஏனென்றால் தமிழகத்தை ஏமாற்றும் திறமை வாய்ந்தவர் ஜெயலலிதா என்றும் அன்பழகன் குறிப்பிட்டார்.