ஈரோடு: கடை வாசல்க‌ளி‌ல் ரகசிய கேமரா

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (11:30 IST)
ஈரோடு நகர்பகுதியில் தீபாவளியை முன்னிட்டு திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க பெரிய ஜவுளி மற்றும் நகைக் கடைகளின் வாசலில் காவ‌ல்துறை‌யின‌‌ர் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர்.

தீபாவளிக்கு புதிய ஆடைகள், நகைகள், இனிப்பு வகைகள் வா‌ங்கசெ‌ய்‌தியாள‌ர் கடைவீதியில் ம‌க்க‌ள் கூ‌ட்ட‌ம் குவிந்துள்ளன. தீபாவளி பொருட்கள் வாங்க வருவோர் கவனத்தை திருப்பி, அவர்களது உடமைகளை அபகரிப்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ஈரோடு நகரில் பன்னீர்செல்வம் பூங்கா, கனி மார்க்கெட், ஈஸ்வரன் கோயில்வீதி, ஆர்.கே.வி.ரோடு, சத்தி ரோடு, பெரியார் வீதி, தாலுகா அலுவலகம் ரோடு ஆகிய பகுதிகளில்தான் பெரிய ஜவுளி நிறுவனங்களும், நகைக்கடைகளும் அமைந்துள்ளன.

இ‌ப்பகு‌திக‌ளி‌ல் குற்றச்செயல்களை தடுக்க காவ‌ல்துறை‌யினரும் ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள வணிக நகரங்களில் ஆயுதப்படை காவ‌ல்துறை‌யின‌ர் 100, சாதாரண காவ‌ல்துறை‌யின‌ர் 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடை வீதியில் பெண் காவ‌ல்துறை‌யின‌ும் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

""ஈரோட்டில் மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, கிருஷ்ணா தியோட்டர் ஆகிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும்,'' என எஸ்.பி., சோனல்மிஸ்ரா கூறியிருந்தார்.

நெரிசல் மிகுந்த பகுதியான மணிக்கூண்டு அருகே மட்டும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற இரு இடங்களிலும் அமைய உள்ளது.திருட்டு சம்வங்களை தடுக்கவும், திருடர்களை கண்காணிக்கவும் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மற்றும் நகைக் கடைகளின் உள்ளேயும், வெளியேயும் ரகசிய கேமராக்களை போலீஸார் பொருத்தியுள்ளனர்.

தனிப்பிரிவு காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் சண்முகம் கூறுகையில், ""மண்டல ஐ.ஜி., ராஜேந்திரன், எஸ்.பி., சோனல்மிஸ்ரா ஆலோசனைப் படி ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகளில் உள்ளேயும், வெளியேயும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் திருடர்களை அடையாளம் காண முடியும்,'' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்