சேல‌ம் ர‌யி‌ல்வே கோ‌ட்ட‌ம் நாளை துவ‌க்க‌ம்!

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (10:25 IST)
சேலம் ரயில்வே கோட்டம் துவக்க விழா நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.

கேரளாவில் உள்ள பாலக்காடு ரயில்வே கோட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சேலம் கோட்டம் உருவாக்கப்படுகிறது. புதிய கோட்டத்துக்கான தொடக்க விழா நாளை நடக்கிறது. ரயில்வே குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு புதிய கோட்டத்தை துவக்கி வைக்கிறார்.

தொடக்க விழாவுக்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமை வகிக்கிறார். விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ரயில்வே கோட்ட தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. நகரமே மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் முதல்வர் கருணாநிதி, அங்கிருந்து சேலம் வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்