தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் ``27-நட்சத்திர சுற்றுலா'' என்ற பெயரில் நட்சத்திரங்களுக்கு ஏற்ப கோயில்களுக்கு 5 நாட்கள் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா வளர்ச்சிக்கழக நிர்வாக இயக்குநர் ராஜாராம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப 27 நட்சத்திர சுற்றுலாவை அறிமுகப்படுத்த உள்ளது. இது 5 நாட்கள் சுற்றுலா ஆகும். நட்சத்திரங்கள் மற்றும் செல்லும் கோவில்களின் விவரம் வருமாறு:-
இந்த சுற்றுலா ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தலங்களாக போற்றப்படும் வழிபாட்டு இடங்களை தரிசனம் செய்துவிட்டு ஞாயிறு மாலை 6 மணி அளவில் சென்னை வந்தடையும். பெரியவர்களுக்கு ரூ.3,800ம், சிறுவர்களுக்கு ரூ.3,200ம் கட்டணம் வசூலிக்கப்படும்.
போக்குவரத்து வசதி, தங்குமிட வசதி, திருக்கோவில் தரிசன வசதி ஆகியவைகளை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பான முறையில் மேற்கொள்ளும். சுற்றுலாவின் போது இரவு வைத்தீஸ்வரன் கோவில், தஞ்சாவூர், மதுரை, காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.
இவ்வாண்டின் முதல் சுற்றுலா நவம்பர் 21-ஆம் தேதி சென்னையிலிருந்து தொடங்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள் முன்பதிவுக்கும், மேல் விவரங்களுக்கும் சென்னை கலைவாணர் அரங்கம் அருகில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தை அணுகலாம். தொலைபேசி எண் 25383333, 25384444.