நவம்பர் 1ஆ‌ம் தேதி உள்ளாட்சிகள் தினவிழா : ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (16:22 IST)
தமிழ்நாட்டில் உள்ள ஊரக, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மாவட்ட ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் என அனைத்து உள்ளாட்சிகளிலும் நவம்பர் 1ஆ‌ம் தே‌தி அன்று உள்ளாட்சிகள் தினவிழா நடை பெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இவ்விழாவினை நவம்பர் 1ஆ‌‌ம் அ‌ன்று ‌சி‌‌ற‌ப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திடுமாறு அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொது மக்களின் நேரடி தொடர்புடைய தல சுயாட்சி அமைப்புகளாக விளங்கி வருகின்ற உள்ளாட்சிகள், மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, சுகாதார வசதிகளை பராமரித்தல் போன்ற சேவைகளை மேற்கொண்டு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி அவர்களது அன்றாட வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய அமைப்புகளாக உள்ளன எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் செ‌ய்‌தி‌க்கு கூ‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்