முழு அடைப்பு :தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலருக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

Webdunia

திங்கள், 29 அக்டோபர் 2007 (13:08 IST)
சேது சமுத்திர திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட முழு அடைப்பிற்கு நீதிமன்றம் தடை விதித்தப் பிறகும் முழு அடைப்பு நடந்தது, நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா என்பதற்கு விளக்கமளிக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தலைமைச் செயலர் எல்.கே. திரிபாதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

முழு அடைப்பு நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்ததையும் மீறி தமிழகம் முழுவதும் அக்டோபர் ஒன்றாம் தேதி முழு அடைப்பு நடத்தப்பட்டதாகவும் அது நீதிமன்றத்தை அவமதித்த செயல் என்றும் கூறி அஇஅதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.என். அகர்வால், பி.பி. நவ்லேகர் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலர், மத்திய அமைச்சர் பாலு அகியோர் மட்டுமின்றி, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் ஆகியோரும் விளக்கமளிக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்புமாறு உத்தரவிட்டது.

ஆனால் இவர்கள் யாரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டியதில்லை எனவும், தனது உத்தரவில் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்