சென்னை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நாளை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி மாமன்றக் கூடத்தில் நடக்கிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்திற்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். துணை மேயர் சத்திய பாமா, ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓர் ஆண்டு பூர்த்தியானதையொட்டி மாநகராட்சியின் சாதனைகளை பாராட்டி ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி உட்பட 20 உறுப்பினர்கள் பேசுகிறார்கள்.
இதையொட்டி கேள்வி நேரம், நேரமில்லா நேரம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.