தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்!

Webdunia

ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (13:38 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் வானிலை ஆ‌ய்வமைய‌ம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே ஏற்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து பகுதிகளிலுமே கடந்த 5 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.

இன்று காலை சென்னையில் இருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்கு தென் கிழக்கில் மையம் கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக சென்னையில் விடிய விடிய பெய்த மழை இன்று காலையிலும் விடாமல் தொடர்ந்தது.

இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 47.6 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 32 மி.மீட்டர் மழை யும் பெய்துள்ளது.

சென்னையில் பெ‌ய்து வரு‌ம் மழை காரணமாக பல இட‌ங்க‌ளி‌ல் த‌ண்‌ணீ‌‌ரி‌ல் ‌மித‌க்‌கிறது. இதனா‌ல் ம‌க்க‌ளி‌ன் இய‌ல் வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்