தமிழகத்தில் மேலும் 2 நாள் மழை பெ‌ய்யு‌ம்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

Webdunia

சனி, 27 அக்டோபர் 2007 (11:52 IST)
தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் பலத்த மழை பெய்யும் என்று செ‌ன்னவானிலை ஆ‌ய்வமைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

வங்கக்கடலில் இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மாநிலத்தில் வட ‌கிழ‌க்கபருவமழை தீவிரம் அடைந்தது. சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று காலையில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

குமரி மாவட்‌ட‌மநாகர்கோவில், ஆரல்வாய்மொழி, முப்பந்தல் ஆகிய இடங்களில் நே‌‌ற்றபல‌த்மழபெ‌ய்தது. சாலைக‌ளி‌லமழைநீர் வெள்ளம் போல ஓடியது. இதனா‌லபோக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று கன மழை பெய்தது. மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பி வழிகிறது.

காவிரி பாசன மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் நேற்றும் தொடர்ந்து மழை கொட்டியது. தொட‌ர்‌‌ந்தநெ‌‌றபயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இ‌ந்மா‌வ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம் ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தேனி மாவட்டம் காட்ரோட்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் டம்டம் பாறையின் மேலே நண்டான்கரை என்னும் இடத்தில் நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. புதுச்சேரி மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக குளங்கள் நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில் மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஏற்கனவே வங்கக்கடலில் இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக்கடலுக்கு சென்று விட்டது. இருப்பினும் பருவமழையின் தீவிரம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஆங்காங்கே பலத்த மழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில முறை மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நே‌ற்று இரவு அதிபட்மழதிருமனூரிலபதிவாகியுள்ளது. இங்கு 51 ீ.மீட்டரமழபதிவாகியுள்ளது.

மற்ஊர்களில் பெ‌ய்த மழையி்னிவர‌ம் : புல்லம்பாடி 54.40 ீ.ீ, நந்தியூர் 33 ீ.ீ, லால்குடி 31 ீ.ீ, புதலூர் 30 ீ.ீ, மாயனூர் 27.4 ீ.ீ, சமயபுரம் 25.6 ீ.ீ, கரூர் 22.4 ீ.ீ, குளித்தலை 22 ீ.ீ, மேலஅணைக்கட்டு 21.2 ீ.ீ, மேட்டூ்ரஅணை 19.8 ீ.ீ, பவானி 19.6 ீ.ீ, திருச்சி விமாநிலையம் 19.2 ீ.ீ, திருச்சி நகரம் 14 ீ.ீ.

வெப்துனியாவைப் படிக்கவும்