இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : படிப்பு முடிந்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் எவ்வித வேலைவாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களின் துயரத்தை துடைத்திடும் வகையில் அவர்களில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200, இளங்கலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300 வீதம் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் முதற்கட்டமாக 11.11.2006 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 24.2.2007 அன்று கோவையிலும், மூன்றாம் கட்டமாக 29.7.2007 அன்று சென்னையிலும் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு இதுவரை மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நான்காம் கட்டமாக 3 லட்சத்து 53 ஆயிரம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் பணிகள் 26.10.2007 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளன.
அன்றைய தினம் தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் விழாக்களில் அமைச்சர் கலந்து கொண்டு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குவார்கள் என்றும் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி அமைச்சர்கள் பங்கேற்கும் மாவட்டங்கள் விவரம் :