தமிழக சட்டசபை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 17ஆம் தேதி தொடங்கிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் 18, 19 மற்றும் 22ஆம் தேதி என நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடர், மீண்டும் சட்டசபை கூடும் நாள் குறிப்பிடப்படாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
கடைசி நாளான இன்று இஸ்லாமிய, கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா உள்பட 14 மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப் பட்டது.