இலங்கை தமிழர் ‌பிர‌ச்சனை- தீ‌ர்மான‌ம் கொ‌ண்டு வரா‌வி‌ட்டா‌ல் போராட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:59 IST)
''ச‌ட்டசபை கூ‌ட்ட‌த்தொட‌ரி‌ல் இல‌ங்கை த‌மிழ‌ர்க‌ள் ப‌ற்‌றி தீ‌ர்மான‌ம் கொ‌ண்டு வர‌வி‌ல்லை எ‌ன்றா‌‌ல் அர‌‌சிய‌ல் க‌ட்‌சி தலைவ‌ர்க‌ள் ‌வீ‌ட்டு மு‌ன்பு போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம்'' எ‌ன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூ‌றினா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க அரசியல் தீர்வு காண வேண்டும். அதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் எ‌ன்றா‌ர்.

சட்டசபையில் இதுபற்றி பேச சட்டமன்ற தலைவர்களுக்கு கடிதம் கொடுத்து இருந்தேன். ஆனால் இதுவரையில் எந்த கட்சியும் பேசவும் வில்லை, தீர்மானம் கொண்டு வரவும் இல்லை. இலங்கை தமிழருக்காகவும் மக்கள் நலனுக்காகவும் சட்ட சபையில் பேசாமல் ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சியும் தனி நபர் லாவணி பாடிக்கொண்டு இருப்பது கண்டிக்கத்தக்கது எ‌ன ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரவில்லை என்றால் அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர்கள் பற்றி பேச தகுதியற்றவர்கள். கட்சி தலைவர்கள் இனி வெளியில் பேசினால் அவர்கள் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவோம். நவம்பர் 6ஆ‌ம் தேதி பிரதமர் வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் எ‌ன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அ‌றி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்