முதலமைச்சர் மீது வீண் பழி : கிருஷ்ணசாமி!

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:58 IST)
''முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌மீது ஜெயல‌‌லிதா கொலை‌‌க் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி இரு‌ப்பது ‌வீ‌‌ண் பழி'' எ‌ன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் எம். கிருஷ்ணசாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.

முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொலைப்பழி குற்றம் சாட்டி இருப்பது கண்டனத்துக்குரியது எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ப‌த்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த அவர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதை கூறியிருக்கிறார். ஒரு முன்னாள் முதலமைச்சர் தற்போதைய முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை கூறும்போது குறைந்தபட்ச ஆதாரத்தையாவது அவர் வெளியிட்டு இருக்க வேண்டும் என ‌கிரு‌ஷ்ணசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்டமன்ற கூட்டத் தொடரை குறைந்தபட்சம் ஒரு வாரம் காலம் நீட்டிக்க வேண்டும் த‌மி‌ழ்நாடு கா‌‌ங்‌கிர‌ஸ் தலை‌வ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்