பள்ளிக‌ளி‌ல் செல்பே‌சி‌க்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia

செவ்வாய், 16 அக்டோபர் 2007 (17:29 IST)
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ-மாணவியர்கள் வயது வரம்பின்றி பள்ளி வளாகங்களுக்குள் செல்பே‌சி கொண்டு வருவதை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளதஎ‌ன்று ப‌ள்‌ளி க‌‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர் பள்ளி நேரங்களில் செல்பேச‌ி பயன்படுத்துவதால் அவர்களது கவனம் முழுக்கக் கல்வி கற்பதிலிருந்து திசை திரும்புகின்றது எனவும், இதன் காரணமாக ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனும் வீணடிக்கப்படுகின்றது என்றும் பல கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் அரசின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு வந்துள்ளனர் எ‌ன்று அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பாடங்களில் கவனத்தை முழுமையாகச் செலுத்தாமல் செல்பே‌சி மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதில் கவனம் செலுத்தும் மாணவ-மாணவியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது‌ எ‌ன்று‌ம் அம‌ை‌ச்ச‌ர் ‌கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

பள்ளிக் கூடங்களில் செல்பே‌சி பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்வதினால் மாணவர்கள் மிகுந்த பயனடைவதுடன் கல்வியில் நல்ல அக்கறை செலுத்துவார்கள். ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த மாணவர்கள் உருவாக வாய்ப்பு உண்டு என்று கருதுவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் வயது வரம்பின்றி செல்பே‌சி கொண்டு வருவதைத் தடை செய்வது குறித்து அரசு பரிசீலித்தது என அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ-மாணவியர்கள் வயது வரம்பின்றி பள்ளி வளாகங்களுக்குள் செல்பே‌சிக‌ள் கொண்டு வருவதை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அரசின் இம்முடிவிற்கேற்ப மாணவ-மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தப்பட்டுள்ளார் எ‌ன்று அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்