கடந்த 2005-06ஆம் ஆண்டில் அரசு திட்டங்களை சிறப்பாகவும், முன் மாதிரியாக கொள்ளும் வகையில் செயல்பட்ட திருச்சி அருகே உள்ள வாளாடி கிராமத்திற்கு, தமிழக அரசு உத்தமர் காந்தி விருதும், ரூ.5லட்சம் ரொக்கப் பரிசும் அளித்துள்ளது.
பரிசை பெற்று வந்த வாளாடி கிராம ஊராட்சித் தலைவர் செ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து ரூ. 4 லட்சம் வாளாடி கிராமத்திற்கு தர உறுதி அளித்து இருப்பதாகவும் எனவே 9 லட்சம் ரூபாய் செலவில் சமுதாயக் கூடம் அமைக்கப்படும் என்றார்.
இரண்டாவது முறையாக தலைவராக பொறுப்பேற்றுள்ள தனது ஊராட்சியில் சிக்கன நடவடிக்கை, வருவாய் பெருக்கம் ஆகியவற்றுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.