''தமிழகத்தில் புதிதாக 175 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகத்தில் மழைக்காலங்களில் பரவும் காய்ச்சலை முற்றிலும் தடுக்க உள்ளாட்சித் துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து அனைத்து முன்னேற்பாடுகளும், தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் போதிய மருந்துகள் உள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி புதிதாக 175 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் அனுமதியும், நிதியும் கிடைத்த பிறகு தமிழகத்தில் புதிதாக 175 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.