ஒரே நேர‌த்‌தி‌ல் 1,230 பே‌ர் வழ‌க்க‌றிஞராக ப‌தி‌ந்து சாதனை!

Webdunia

வியாழன், 11 அக்டோபர் 2007 (10:29 IST)
இந்தியாவில் முதன் முறையாக சட்டக்கல்வி படித்த 1,230 பேர் ஒரே நேர‌த்‌தி‌ல் வழ‌க்க‌றிகளாக நேற்று பதிவு செய்தனர்.

சட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே வழ‌க்க‌றிஞ‌ர் தொழிலை செ‌ய்ய முடியு‌ம். இவ்வாறு படித்தவர்களுக்கு அவ்வப்போது பதிவு செய்ய ஏற்பாடு செய்வது வழக்கம்.

ஆனால் இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரே சமயத்தில் 1,230 பேர் வழ‌க்க‌‌றிஞ‌ர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

1,230 பேர்களும் வழ‌க்க‌றிஞ‌ர்களுக்குரிய கருப்பு உடை அணிந்து அரங்கத்தில் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்‌‌கினார். பார்கவுன்சில் உறுப்பினர் வெங்கடேசன் வக்கீலாக பதிவு செய்தவர்களுக்கு உறுதிமொழியை செய்து வைத்தார்.

விழாவில் உய‌ர் ‌நீ‌தி‌ம‌ன்ற நீதிபதி பி.டி.தினகரன் இந்த புதிய இளம் வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பாராட்டி பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்