மாநகராட்சி அனைத்து மழலையர் பள்ளியிலும் நவீன முறை பயிற்சி வகுப்பு: மு.க.ஸ்டாலின்!

Webdunia

புதன், 10 அக்டோபர் 2007 (17:25 IST)
செ‌ன்னை மாநகரா‌ட்‌சி‌யி‌ன் அனை‌த்து மழலைய‌ர் ப‌ள்‌ளி‌யிலு‌ம் ந‌வீன முறை ப‌யி‌ற்‌சி வகு‌ப்பு துவ‌ங்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்‌டா‌‌லி‌ன் கூ‌றினா‌ர்.

சைதாப்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி புதிய பள்ளி கட்டிடங்களை இ‌ன்று திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும் மாநகராட்சி பள்ளிகளில் நவீன முறை (மாண்டிசேரி) மழலையர் வகுப்புகளை தொடங்கி வைத்து உ‌ள்ளா‌‌ட்‌சி‌த் துறை அமை‌ச்ச‌ர் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகை‌யி‌‌ல், சென்னை மாநகராட்சி மேயராக நான் இருந்தபோது மாநகராட்சியில் மழலையர் பள்ளிகள் துவக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட ஊக்கமும், வாய்ப்பும் அளிக்கும் வகையில் மாண்டிசேரி மழலையர் பயிற்சி வகுப்புகள் துவக் கப்பட்டுள்ளது எ‌ன்றா‌ர்.

ஏழை எளிய மாணவ - மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இந்த வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. படிப்படியாக சென்னை மாநக ராட்சியில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளிலும் மாண்டிசேரி பயிற்சி வகுப்பு'கள் தொடங்கப்படும் எ‌ன்றா‌ர் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்