தி.மு.க.வுக்கு பெயர் கிடைத்துவிடும் எ‌ன்பதா‌ல் சேது திட்டத்துக்கு ஜெ. முட்டுகட்டை : கருணாநிதி!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:59 IST)
''சேதசமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்‌றினா‌ல் ‌ி.ு.க.வு‌க்கபெய‌ர் ‌‌கிடை‌த்து‌விடு‌மஎ‌ன்பதா‌லஅ‌ந்த ‌தி‌ட்ட‌த்த‌ி‌ற்கஜெயல‌லிதமு‌ட்டு‌க‌‌ட்டபோடு‌கிறா‌ர்'' எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌‌றியு‌‌ள்ளா‌ர்.

சேது சமுத்திரத் திட்டம் குறித்து 1955-ம் ஆண்டிலிருந்து இன்று வரை நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளும் தொழில் நுட்ப ரீதியாக திட்டம் சாத்தியமானது என்றே நிரூபித்திருக்கின்றன. இதில் எள்ளவு ஐயம் கூட யாருக்கும் இருந்தது இல்லை. ஆய்வு சரிவர நடத்தாமல், அவசரமாக அறிவிக்கப்பட்ட திட்டம் என்று தற்போது விமர்சனம் செய்யும் ஜெயலலிதாவிற்கு இதோ சில விளக்கங்கள் எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

1860இல் தொடங்கி, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை ஆய்வு செய்து தரப்பட்ட ஒன்பது அறிக்கைகள் :

1) 1860-கமாண்டர் ஏ.டி. டெய்லர் வகுத்த திட்டம்.
2) 1861-டௌன்சண்ட் தயாரித்த திட்டம்.
3) 1862-எல்ஃபின்ஸ்டன் வேண்டுகோளை ஏற்று அமைக்கப்பட்ட இங்கிலாந்து நாடாளுமன்றக் குழு தந்த ஆய்வு அறிக்கை.
4) 1863-சென்னை மாகாண கவர்னர் வில்லியம் டென்சன் தந்த ஆய்வு அறிக்கை.
5) 1871-ஜான் ஸ்டோர்டாட்தந்த ஆய்வு அறிக்கை.
6) 1872-பொறியாளர் ஜார்ஜ் ராபர்ட்ஸ்டன் தந்த ஆய்வு அறிக்கை.
7) 1884-இவரது அறிக்கையின் அடிப்படையில் கால்வாய் அமைக்கும் பணியை, ஜான் கோட் என்பவர் உதவியுடன், சௌத் இண்டியன் ஷிப் கேனால் அண்டு கோடிங்ஸ்டேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கினாலும், நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது.
8) 1902-சௌத் இண்டியன் ரயில்வே கம்பெனி தந்த திட்ட அறிக்கை.
9) 1922-பொறியாளர் இராபர்ட் பிரிஸ்டோ தந்த ஆய்வு அறிக்கை எ‌ன்றகருணா‌நித‌ி ‌விள‌க்க‌மஅ‌‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

தற்போது சேது சமுத்திர திட்டத்தை முழு மூச்சோடு எதிர்க்கும் கட்சிகளில் ஒன்றான பா.ஜ.க. மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதுதான் இந்த புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அப்போதைய தரைப் போக்குவரத்து துறை அமைச்சர் அருணஜேட்லி 9-3-2001 அன்று ஒப்புதல் அளித்து உள்ளார் எ‌ன்றமுத‌ல்வ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தற்போதுள்ள 6-வது பாதை பா.ஜ.க. அரசினால் தான் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்களே இந்தப் பாதைக்கு ஒப்புதல் தந்துவிட்டு தற்போது ராமர்பாலம் என்று அவர்கள் ஒப்புக்கொண்ட திட்டத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களை நாம் கேட்க விரும்புவதெல்லாம் பா.ஜ.க.வின் மத்திய அரசு 2002-ம் ஆண்டு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய போது இது ராமரபாலம் உள்ள இடம், இங்கே திட்டத்தை நிறை வேற்றக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை எ‌ன்றகருணா‌நி‌தி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்காக 2004 செப்டம்பர் முதல் 2005 பிப்ரவரி வரை 6 கடலோர மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டங்கள் 3 சுற்றுகளாக 14 இடங்களில் நடை பெற்றுள்ளது. இந்த கூட்டங்கள் எதிலும் ஒரு முறைகூட ஒருவராலும் ராமர் பாலம் என்ற பெயர் உச்சரிக்கப்படவில்லை எமுத‌ல்வ‌ர் கூறியுள்ளா‌ர்.

சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஜெயலலிதா 2001, 2004 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே, "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டு மொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்து ஆண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று அமைய இருக்கும் மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்'' என்று சொல்லியிருந்தார்கள் எ‌ன்றமுத‌‌ல்வ‌ரசு‌ட்டி‌ககா‌ட்டியு‌ள்ளா‌ர்.

இதற்கெல்லாம் பிறகுதான், ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் சேது சமுத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டு நடை முறைப்படுத்த தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையிலே வலியுறுத்திய ஜெயலலிதா, தி.மு.க.வும் இடம் பெற்றுள்ள இந்த மத்திய ஆட்சியில் சேது சமுத்திரத்திட்டம் நடைமுறைபபடுத்தப்பட்டால், அதனால் தி.மு.க.விற்கு பெயர் வந்துவிடக் கூடும் என்று எண்ணி தற்போது அதற்கு முட்டுக்கட்டை போட படாதபாடுபடுகிறார் எ‌ன்று கருணாநிதி கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்