மதம் மனிதர்களை நெறிப்படுத்த வேண்டும்-பொன்னம்பல அடிகள்

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (16:52 IST)
மதம் மனிதர்களை நெறிப்படுத்த வேண்டும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.

திருச்சியில், மணிமேகலை பிரசுரத்தின் 16 நூல்கள் வெளியீட்டு விழா தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

விழாவில், கறுப்பு கரன்சி வெள்ளை நோட்டுக்களாக மாற்றப்பட்டு வரும் சூழலில், வெள்ளைத் தாளில் கறுப்பு மையை பதித்து நூல் விற்பனையும் நடைபெற்று வருகிறது.இந்த வணிகத்தில் அறம் இருக்கிறது. மனித நேயம் இருக்கிறது.

புத்தகங்களை வாசிக்காதவர்கள்.... சுவாசிக்காதவர்களாவர். வாசிப்பதையும், நேசிப்பதையும் கடந்த தலைமுறை அவசியமான ஒன்றாக கொண்டிருந்தது. மதங்கள் மனிதாக்ளை நெறிப்படுத்த வேண்டும். வெறிப்படுத்தக் கூடாது என்று பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்