ஏஐடியுசி சார்பில் டிசம்பர் 4, 5ல் நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐடியுசி பொதுக்கூட்டத்தில் மக்களவை உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா பேசுகையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எதற்காக பாஜக தலைமையிலான அரசை தூக்கி எறிந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனரோ அதை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது.
என்ன சாதிப்பதாக கூறினாலும் பொருளாதார நிலை மோசமாக உள்ளது.எனவே மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்து வரும் டிசம்பர் 4,5 ஆம் தேதிகளில் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய ரயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என்று கூறினார்.