ரேசன் கடைகளில் கோதுமை மாவு

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (17:37 IST)
ரேசன் கடைகளில் விரைவில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும் என்று தழிழக உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் க. ராஜாராமன் கூறினார்.

நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய க. ராஜாராமன், தமிழக ரேசன் கடைகளில் போதுமான பொருட்கள் உள்ளன. மேலும் பருப்பு, எண்ணெய்களும் விற்கப்படுகின்றன.

இந்த கூடுதல் விற்பனை திட்டம் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இதனைத் தொடர்ந்து விரைவில் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட உள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்