17ஆ‌ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (16:03 IST)
வரு‌ம் 17ஆ‌ம் தேதி தமிழக சட்டசபை குளிர் கால கூட்டத் தொடர் தொடங்குகிறது.

அன்று காலை 9.30 மணிக்கு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து கூட்டம் நடக்கிறது. பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி சட்டசபை நிகழ்ச்சி நிரலை முடிவு செய்கிறது. ஒரு வாரம் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

சட்டசபை கூட்டத்திற்கான அறிவிப்பை ஆளுநன‌ர் வெளியிட்டுள்ளதாக சட்டசபை செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் கேபிள் டி.வி. பிரச்சினை, சேது சமுத்திரதிட்டம் உள்பட பல்வேறு பிரச்சி னைகள் குறித்து காரசார விவாதம் நடக்கும் எ‌ன்று தெ‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்