கி‌ரி‌க்கெ‌ட்டா‌ல் ‌சீர‌ழி‌வு: ராமதா‌ஸ்!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (15:23 IST)
''கிரிக்கெட் ஆட்டத்தால் சமுதாயம் சீரழிந்து வருகிறது. கிரிக்கெட் மோகத்துக்கு எதிராக நான் மட்டும்தான் குரல் கொடுக்கிறேன். எனக்கு ஆதரவாக யாரும் பின்னால் இல்லை'' எ‌ன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இ‌ன்று செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றினா‌ர்.

தமிழக மக்கள் தொகையில் இளைஞர்கள் 43 ‌விழு‌க்காடபேர் இருக்கிறார்கள். செயல் துடிப்பும் ஆற்றல் வளமும் கொண்ட நமது இளைஞர்களை முறையாக நெறிப்படுத்தி வழி நடத்தினால் நாடு வளம் பெறும். தற்போது அவர்கள் நடிகர், நடிகைகளுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போதை, புகை பழக்கத்துக்கு ஆளாகி வருகிறார்கள். மது குடிப்பதில் தமிழ்நாடு இந்தியாவில் 2-வது இடத்தில் உள்ளது எ‌ன்றமரு‌த்துவ‌ரராமதா‌ஸதெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிரிக்கெட் ஆட்டத்தால் சமுதாயம் சீரழிந்து வருகிறது. கிரிக்கெட் மோகத்துக்கு எதிராக நான் மட்டும்தான் குரல் கொடுக்கிறேன். எனக்கு ஆதரவாக யாரும் பின்னால் இல்லை. அனைத்து விளையாட்டுகளுக்கும் அரசு ஊக்கம் அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் செல்பே‌சிக‌‌ள் தடை செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம் எ‌ன்று ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்‌.

முதலமைச்சர் இசை பல்கலைக்கழகம் அமைத்ததை வரவேற்கிறோம். ஆனால் 17 இசை பள்ளிக் கூடங்கள் தொடங்கப்பட்டு அனாதையாக இருக்கிறது. இந்த பள்ளிகள் மீது முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் இசையை கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும். இசை பல்கலைக்கழகத்தை தமிழ் இசை பல்கலைக்கழகமாக கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம் எ‌ன ராமதா‌ஸ் கு‌றி‌ப்‌பி‌ட்ட‌ா‌ர்.

மத்தியில் இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இல்லை. 2011 வரை தி.மு.க. ஆட்சியை ஆதரிப்போம். கர்நாடகாவில் நடக்கும் அரசியல் கேலி கூத்தானது. அரசியலில் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்