கடந்த மாதம் 1ஆம் தேதி வழக்கறிஞர் மதிவாணன் என்பவர் கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அங்குள்ள ஊழியருக்கும் வழக்கறிஞர் மதிவாணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தரப்பிலும் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்கதலைவர் பால் கனகராஜ், செயலாளர் மோகன கிருஷ்ணன் இருவரும் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சந்தித்து, வழக்கறிஞர் மதிவாணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.
இன்று வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.
நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் திரண்டு வழக்கறிஞர் மதிவாணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினார்கள். இந்த புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.