கடத்தப்பட்ட ந‌ட்ச‌த்‌திர ஆமைக‌ள் ப‌றிமுத‌ல்!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (18:16 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌ந்து மலே‌சியா‌வி‌ற்கு‌க் கட‌த்த முய‌ன்ற 300 ந‌ட்ச‌த்‌திர ஆமைகளை செ‌ன்னை ‌விமான ‌‌நிலைய‌த்‌தி‌ல் சு‌ங்க அ‌திகா‌ரிக‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர். இது தொட‌ர்பாக ஒருவ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இரு‌‌ந்து மலே‌சிய‌த் தலைநக‌‌ர் கோலா ல‌ம்பூரு‌க்கு‌ச் செ‌ல்ல முய‌ன்ற அ‌ன்சா‌‌ரி (19) எ‌ன்ற இளைஞ‌‌ரி‌ன் உடமைகளை சு‌ங்க‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் ச‌ந்தேக‌த்‌தி‌ன் பே‌ரி‌ல் சோதனை செ‌ய்தன‌ர்.

அ‌ப்போதஅ‌ந்த உடமைக‌ளி‌ல் 333 ந‌ட்ச‌த்‌திர ஆமைக‌ள் மறை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது தெ‌‌ரியவ‌ந்தது. அவ‌ற்‌றி‌ன் ம‌தி‌ப்பு ச‌ர்வதேச‌ச் ச‌ந்தை‌யி‌ல் ரூ.3.5 ல‌ட்சமாகு‌ம்.

அவ‌ற்றை‌ப் ப‌றிமுத‌ல் செ‌ய்த அ‌திகா‌ரிக‌ள் அ‌ன்சா‌ரியை‌க் கைது செ‌ய்தன‌ர். அ‌ன்சா‌ரி ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் இளையா‌ன்குடியை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர் ஆவா‌ர்.

மரு‌த்துவ குண‌ம் உ‌ள்ள ந‌ட்ச‌த்‌திர ஆமைக‌ள் மலே‌சியா ம‌ற்று‌‌ம் தெ‌ன்‌கிழ‌க்கு ஆ‌சிய நாடுக‌ளி‌ல் ந‌ல்ல‌ விலை‌‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்