தி.மு.க. மாணவர் அணி செயலாளர் இல.புகழேந்தி, அயனாவரத்தை சேர்ந்த தங்கையா ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முதலமைச்சர் கருணாநிதியின் தலையை துண்டித்து கொண்டு வருபவருக்கு தங்கம் பரிசு வழங்கப்படும் என்று விசுவ இந்து பரிசத்தை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.
கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசியது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் உள்ளது. அவரது பேச்சு பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மதஉணர்வை தூண்டும் வகையிலும் உள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த வழக்கு எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டு நீதிமன்ற நீதிபதி ராஜகோபாலின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை 10ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.