ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போரட்டம்

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (11:10 IST)
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனை முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் ஆய்வு கூட்டத்தை இரவு நேரத்தில் நடத்துவதாக ஆட்சியர் சுந்தரமூர்த்தி மீது புகார் எழுந்தது.

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த செவிலியர் ஒருவர் கடந்த 18ம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்தார். அதனால் செவிலியர் சங்கத்தினர் பதட்டமானார்கள்.

இதனால் இதற்கு மாவட்ட ஆட்சியர்தான் காரணம் என குற்றம்சாட்டினார்கள். இதனால் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் நவீன வசதி இருந்தும் கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல காரணம் கேட்டு 118 அரசு மருத்துவர் மற்றும் 240 செவிலியர்களுக்கு மாவட்ட சுகாதார நிர்வாகம் சுற்றறிக்கை தரப்பட்டது.

இது ஏற்கனவே பதட்டத்தில் இருக்கும் செவிலியர்களை மேலும் ஆத்திரம் அடய செய்தது. இதனால் கிராம செவிலியர் சங்கத்தினர் ஆட்சியர், துணை சுகாதார இயக்குனர், நாமகிரிப்பேட்டை மருத்துவ அலுவலர் ஆகியோர் மீது மனித உரிமை மீறல், பெண்களை இழிவுபடுத்துதல் குற்றங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி நேற்று நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கலெக்டர், சுற்றறிக்கை அனுப்பிய சுகாதார துணை இயக்குனர், நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவ அலுவலர் ஆகியோர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் நேற்று அறிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்