நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் பந்த் நடந்ததாகக்கூறி, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிமுக முடிவு செய்துள்ளது.
மேலும், அரசியல் சாசன சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி திமுக அரசை பதவி நீக்கம் செய்யக் கோரும் மனுவையும் தாக்கல் செய்ய அது தீர்மானித்திருப்பதாக, அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர்கள் புதனன்று உச்சநீதிமன்றத்தில் இதற்கான மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று அதிமுகவை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
வேலைநிறுத்தத்தின்போது பணி மனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது; கடைகள் மூடப்பட்டது, பந்து தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.