தினமு‌ம் கா‌ங்‌கிரசை ‌‌மிர‌ட்டி‌க் கொ‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள்: இளங்கோவன் பே‌ச்சு!

Webdunia

செவ்வாய், 2 அக்டோபர் 2007 (15:25 IST)
அணு ஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ல் ‌தினமு‌ம் கா‌ங்‌‌கிரசை க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட்டுக‌ள் ‌‌மிர‌ட்டி‌க் கொ‌‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ஈ.‌வி.கே.எ‌ஸ்.இள‌ங்கோவ‌ன் கூ‌றினா‌ர்.


காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜ‌ர் நினைவு நாள் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இ‌ன்று கொ‌ண்டாட‌ப்ப‌ட்டது. விழாவில் மத்திய மந்திரி இளங்கோவன் பேசுகை‌யி‌‌ல், காந்தியை கேலி செய்த வெள்ளைக்காரர்கள் இன்று அவரின் அகிம்சையை ஏற்றுக் கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் அகிம்சை தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. நாடு முன்னேற நல்ல திட்டங்களை காங்கிரஸ் கட்சி கொண்டு வருகிறது எ‌ன்றா‌ர்.

ஆனால் அந்த திட்டங்களை வெளியே இருந்து ஆதரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு உள்ளே இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை தேவை மின்சாரம், அதற்காக அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை கம்யூனிஸ்டுகள் தவறு என்கிறார்கள் எ‌ன்று இள‌ங்கோவ‌ன் கூ‌றினா‌ர்.

கம்யூனிச நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருந்தால் வரவேற்றிருப்பார்கள். தினமும் காங்கிரசை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே மிரட்டினால் மீண்டும் மக்களிடம் ஆதரவு கேட்க காங்கிரஸ் தயங்காது. தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி எப்போது என்ற எண்ணம் தான் ஒவ்வொரு காங்கிரசாரிடம் உள்ளது. விரைவில் அதற்கு விடை கிடைக்கும் என இள‌ங்கோவ‌ன் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்